articles

img

விண்வெளியில் உருளைக்கிழங்கு பொரியல்

விண்வெளியில் உணவுப் பொருட்களை பொரிக்க முடியுமா என்று ஐரோப்பிய விண்வெளி முகமை சோதனை செய்யத் தொடங்கியுள்ளனர். நுண்ஈர்ப்பு சூழலில் ஆய்வுகள் நடத்தி விண்வெளியில் உருளைக்கிழங்கை வறுக்க முடியுமா என்று சோதித்துள்ளனர். விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால் மேலெழும்புவது இயலாது. எண்ணெயில் உருளைக்கிழங்கை போட்டவுடன் அதன் மேல் குமிழிகள் பரவி சரியாக வேகவோ பொரியவோ செய்யாது. ஆனால் குறைந்த ஈர்ப்புவிசையில் செய்யும்போது பூமியில் நடப்பது போல குமிழிகள் கிழங்கின் மேற்பரப்பிலிருந்து விலகின. மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றாலும் விண்வெளி வீரர்கள் இப்போதுள்ள நீரேற்றப்பட்ட உணவுகளோடு வேறு சிலவற்றையும் ருசி பார்க்க முடியும் என்பதை இது காட்டுகிறது. சத்து மற்றும் ருசி தவிர விண்வெளியில் பொரிக்கும் முறையானது மரபான கொதித்தல், நுண் ஈர்ப்பில் சூரிய சக்தியிலிருந்து ஹைடிரஜன் தயாரிப்பது போன்ற பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காண உதவும் என்கிறார் இந்த ஆய்வின் உறுப்பினர் ஜான் லியம்பாஸ்.